மரபு சார்ந்த பாரம்பரியமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட புகழுக்குரியது மதுரை என்ற மாநகர். அந்த மாநகரில் 80 ஆண்டுகளைக்கடந்த பெருமைக்குரியது 'சைபால்'.
சைபால் என்ற பெயர் இன்றைக்கு ஐம்பது வயதை கடந்தவர்கள் தொடங்கி இன்றைய குழந்தைகள் வரை அறியும் மூன்று தலைமுறை வளர்த்த தயாரிப்பு அது.
சருமரோக நிவாரணி என்கிற சைபால் தோலில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத் திற்கும் தக்க தீர்வைத் தரும் என்பது மக்கள் அனுபவத்தின் மூலம் கண்ட உண்மை .
சைபால் உருவான வரலாறு:
சுதந்திரப் போராட்ட உணர்வு தீயெனப் பற்றி பரவிக்கொண்டிருந்த காலம். நாடு காந்தியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயலாற்றி வந்த நேரம்.
சுதந்திரம் கேட்டுப் போராடிய நம் மக்களை சொந்தமாக சிந்தித்து ஒரு பொருள் தயாரிக்கத் தெரியாத இவர்கள் அதை வாங்கி என்ன செய்ய முடியும் என வெள்ளையர்கள் ஏளனத்துடன் பேசி வந்த காலம். இந்த வார்ததைகளைக் கேட்டார் அந்த இளைஞா. பிறரை எதிர்பார்த்திருப்பதால் தானே இந்த அவச்சொல். நாமே ஒரு பொருளை தயாரித்து விற்பனை செய்ய முடியாதா என்ற எண்ணம் அவருள் எழுந்தது. எண்ண ம் செயலானது. அன்று 18 வயதே ஆன அந்த இளைஞன் தொடங்கிய நிறுவனந் தான் 'சைபால்'.
ஏன் சைபால் தயாரிப்பு?
திடீரென ஒரு பொருளை உற்பத்தி செய்து விட முடியுமா என்ன? மருந்து கம்பெனியில் வேலை பார்த்த அந்த இளைஞனின் பெயர் எஸ்.சுப்பிரமணியன்.
அன்று விவசாயம்தான் மக்களின் முதன்மை யான தொழில். சோற்றில் சிறிது நேரமும் சேற்றில் அதிக நேரமாக மக்கள் உழைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் கால் விரல் இடுக்குகளில் ஏற்படும் சேற்றுப் புண் அவர்களை மிகவும் அவதிப்பட வைத்தது.
அதற்கான மருந்தோ வெளிநாட்டில் இருந்து தான் வந்தாக வேண்டும். அதிக விலை யுள்ள அதை எல்லோராலும் வாங்க முடியாது. விலையோ கதிரைக்க விலையோ குதிரைக்கொம்பு என்பார்களே அப்படி,
இதைப் பற்றி யோசித்தார் சுப்பிரமணியன்.
"சொந்தமாக ஒரு பொருள். கூடுதல் தரத்துடன் குறைந்த விலையில் அது மக்களுக்காக போய் சேர வேண்டும்" இந்த எண்ணம் அவரை நிறைய யோசிக்க வைத்தது. அவரும் தெளிவான முடிவுக்கு வந்தார்.
வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கக் கூடிய இந்த மருந்தை நாமே தயாரிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. ஒத்து நண்பர் ஒருவர் உடன் இணைய பிறந்தது தி சவுத் இண்டியன் மேனுபாக்சரிங் கம்பெனி.
தொடக்க காலத்தில் இதன் பெயர்'சைபால்' குடிசைத் தொழில் அடிப்படையில் தான் தொடங்கப்பட்டது.
இரண்டாம் தலைமுறை:
சைபால் களிம்பானது, சிவப்பு டப்பாவில் அடைக்கப் பட்டது. அதை தலையில் எடுத்துச் சென்று ஊர் ஊராக வியாபாரம் செய்து வந் தார் சுப்பிரமணியன். 1940 களில் சைபாலின் விலை 6 அணா- இன்றைய மதிப்பில் அதாவது 36 பைசா.
வெயில், மழை என கண்டுகொள்ளாது தனது உழைப்பால் நிறுவனத்தை வளர்த்து வந்த அவர் திடீரென மறைந்து போனார்.
இப்போது இதை நிர்வாகம் செய்து வருபவர்கள் அவரின் பேரன்கள் எஸ்.எஸ்.சுப்பிர மணியன் மற்றும் எஸ்.பாலாஜி இருவரும் நிறுவனத்தை சிறப் பாக வழி நடத்தி வருகின்றனர்.
தாத்தாவை பேசி விட்டு பேரனைப் பேசுகிறதே கட் டுரை. இடையில் மகன் என்ன செய்தார் என்ற கேள்வி உங்க ளுக்கு எழுந்திருக்க வேண்டும்.
இதோ அதற்கான விளக்கம்.
நாம் முன்பே குறிப்பிட்டபடி நிறுவனத்தின் தொடக்க காலத்தில் அதற்காக ஓடி, ஓடி உழைத்த நிறுவனர் எஸ்.சுப்பிரமணி பிள்ளை 1972 ஆம் ஆண்டு திடீரென இறப்பைச் சந்தித்துவிட்டார்.
55வயதில் அவர் மரணமடைந்த போது அவருடைய மகன் சங்கர நாராயணனுக்கு பதினைந்தே வயதுதான். அது வரை சுதந்திரப் பறவையாகத் திரிந்து கொண்டிருந்தவர் நிர்வாகத்துக்கு வந்தார்.
நிறுவனத்தின் விரிவாக்கம்:
வாழ்க்கை என்பது தேர்வு வைக்கும் முறை விசித்திரைமானது. பாடம் கற்ற பின் தேர்வு எழுதுவது நடைமுறை என்பதை அறிவோம். ஆனால் வாழ்வோ தேர்வு வைத்த பின்தான் பாடத்தைக் கற்பிக்கும். அதன் பெயர் அனுபவம்.
அப்படி நிறுவனத்தில் பொறுப்பேற்றதும் சங்கர நாராயணன் நிறைய அனுபவத்தைப் பெற்றார். நிறைய இழப்புகளுக்குப் பின் நீண்ட வெற்றிபெற்றார். நிறுவனத்தின் சோதனையான காலகட்டங்களில் துணை நின்றவர்களை பாராட்டினார். அக்கால கட்டங்களில் ' அவர்களின் ஆதரவை கேட்டுப் பெற்றார்.
நல்ல நிறுவன ஊழியர்கள், அன்பான ஆலோசனை தரும் நண்பர்கள், அயாராத உழைப்பு மூன்றும் கிடைத்தால் என்ன நடக்கும்? அபாரமான வளர்ச்சிதானே! அது தான் நடந்தது.! ஆந்திரா, கேரளா, கர்நாடகா என விற்பனை பெரும் வளர்ச்சி கண்டது.
சைபால் என்பது விவசாய நேரத்திலும், மழை நேரத்திலும் மக்கள் தேடும் பொருளாக இருந்த சூழலை, விளம்பர அணுகுமுறைகளால் மாற்றினார். ஆண்டு முழுவதும் அவர்கள் தேடும் பொருளாக விளம்பர உத்திகளால் அதை செயல்படுத்தியும் காட்டினார்.
நிறுவனத்தின் கடன் சுமை குறைந்தது. தீர்ந்தது. மருத்துவ முகாம்களை நடத்தினார். ஆன்மீக காரியங்களுக்கு மிகவும் உதவினார். பிள்ளைகளை சுப்ரமணியன், பாலாஜி ஆகிய இருவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பிபடிக்க வைத்தார்.
நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து கொண்டிருந்த காலகட்டம். சைபால் நிறுவனத்தின் நிறுவனரான எஸ்.சுப்ரமணியம் பிள்ளை இறந்தது தனது 55 வயதில் தான்.
அது போலவே மகன் எஸ்.சங்கர நாராய ணனும் அதே வயதில் இறப்பை சந்தித்தார். அவர் பட்டயக் கணக் காளர் (ஆடிட்டர்) படிப்பு கற்றவரும் கூட.
மூன்றாம் தலைமுறையின் நிர்வாகத்தில்...
சைபால் நிறுவனம் மீண்டும் ஒரு சோதனை காலத்தை சந்தித்தது. வெளிநாட்டில் படித்த பிள்ளைகள், வெளி உலகம் தெரியாத தாயார், உறவினர்களாய் உடனிருக்கும் நிறுவன ஊழியர்கள்... இதில் எப்படி அடுத்த கட்ட வளர்ச்சி உருவானது... அது ஒரு சாதனைக் கதை எனலாம்.
தந்தை உருவாக்கிய நிறுவனத்தை தான் கற்ற ஆடிட்டர் படிப்பின் மூலம் புதிய கட்டமைப்புடன் வர்த்தக சுவடுகளில் தனித்து வமாகவே உருவாக்கிச் சென்றிருந்தால் சங்கர நாராயணன்.
தங்கள் தாயாரின் ஆதரவால் தந்தையின் செயல்பட்டு அனுபவங்கள் உணர்த்திய சீரிய பாதையில் பிள்ளைகள் எஸ்.எஸ்.சுப்ரமணியன், எஸ்.பாலாஜி இருவரும் நிறுவனம் பொறுப் பேற்றார்கள்.
தந்தை அமர்ந்த நாற்காலியில் தாயை அமர வைத்தனர். தாத்தா, தந்தை இருவரின் சிலையையும் தொழிற்சாலை வாசலில் வைத்தனர். இருவரும் தொழிலில் துணை இருப்பதாக எண்ணி செயல்பாடுகளை முன்னெடுத்தனர்.
காலத்திற்கேற்ற வளர்ச்சிப் பார்வை:
கற்ற கல்வியை நிறுவன வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்தினர். நவீன கருவிகளை இறக்குமதி செய்து உற்பத்தியை உயர்த்தினர். உற்பத்திக்கேற்ப சந்தை வரவேற்பை விரிவுபடுத்தினர்.
சிவப்பு டப்பா என்று தான் கிராமத்து மக்கள் சொல்லி வாங்குவார்கள்.
காலத்திற்கேற்ற நவீன முயற்சியைகளையும் இந்த இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர். அதன் முன்னோட்டமாக பேஸ்ட் வடிவிலும் சைபால் வரவுள்ளது.
முன்பே நிறுவனம் பெற்றிருக்கும் அனுமதியின் படி, குழந்தைகள் செரிமானம், பெரியவர்களுக்கு வரும் நீர்க் கடுப்பு போன்றவற்றுக்கும் மருந்து தயாரிக்கும் முயற்சியை முன்னெடுக்க உள்ளனர். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
2015 -ல் சென்னையில் பெருமழை பெய்த மழை, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட தோல் நோய்களுக்கு, கால் புண்களுக்கு பலர் சைபால் களிம்பை வாங்கிக் கொடுத்தார்கள். நிறுவனமும் இலவசமாகவும், சலுகை விலையிலும் சைபாலை வழங்கியது நினைவு கொள்ளத்தக்கது.
தென்னக மாநிலங்களில் விவசாயிகளி டையே நீர் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப் போரின் சருமப் பிரச்சினை களுக்கு 'சைபால்' என்ற பெயர் மூன்று தலைமுறைகண்ட வரலாற்றைச் சொல்கிறது.
தொடர்புக்கு: 0452- 2534108, 91-77083 87080.
- தஞ்சை .என்.ஜே.கந்தமாறன்