தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்.
முக்கிய அம்சங்கள்:
சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி யில் 21.996 ஏக்கரில் தொழில் முனைய மேம் பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1224.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண் துறையை அடுத்து வேலை வாய்ப்பை வழங்கும் துறையான ஜவுளித் துறையை அரசு கூடுதல் கவனத்துடன் மேம்படுத்த உள்ளது. கைத்தறி மற்றும் விசைத் தறிகளுக்கு இலவசமின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும்.
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு நிகர கடன் மற்றும் முன் பணம் உட்பட ஒட்டு மொத்த மூலதன நிதி ஒதுக்கீடு 37,728.65 கோடி ரூபாயாக கணிசமாக உயர்த்தப் பட்டுள்ளது. இது 2019-20-ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டைவிட 25.8சதவீதம் திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு இது.
புதியதிட்டங்கள்:
சென்னைக்கு அருகில் உள்ள திருப்பெரும் புதூர் மற்றும் ஓசூரில் 53.44 கோடியில் தொழில் புதுமை முயற்சி மையங்களை நிறுவும் பணிகளை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும். ரூ.34.81 கோடியில் வர்த்தக எளிதாக்குதல் மையம் ஒன்று சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை சுத்தி கரிக்கும் ஆலையை 634 கோடியில் சிப்காட் நிறுவனம் அமைக்கிறது.
சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,966 ஏககா பரப்பளவில் பொனனோ தொழில் முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்துவது பற்றி மேலே குறிப்பிட்டோம்.
அதன விவரங்கள் வருமாறு இக்கிட்டக் திற்கான மாநில அரசின் ஆதரவு வழங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்பந்தத்திற்கும், பங்குதாரர்களின் ஒப்பந்தத் தற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை பொருளாதார பெருவழிச் சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.
காட்டுப்பாக்கம் அருகே ஜி.எஸ்.டி சாலை யில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பின்டெக் சிட்டி அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு விமான நிலையத்திற்கான ஆயத்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உணவுப்பூங்காக்கள்:
வளர்ந்து வரும் உணவுப் பொருளாதார சந்தை வளர்ச்சியை கவனத்தில் கொண்டு இதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் ரூ.70 கோடி செலவில் நிறுவப்படும்.
உணவுத் துறை வளர்ச்சியின் முக்கியத்துவம் கருதி வேளாண் வளர்சிக்கான பல திட்டங்கள் நிதி ஒதுக்கீடுகள் அது சார்ந்த மேம்பாட்டு திட்டங்களுக்காக செய்யப் பட்டுள்ளன.
நீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறை இந்த ஆண்டு 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படுகிறது.
கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன ஊக்குவிப்பு திட்டம் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவுதல் போன்ற பல தரப்பட்ட முன்னோக்குத் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
தொழில் வளர்ச்சிகளுக்காக...
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்காக 607.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி எனும் பொருட்கள் மற்றும் சேவை வரி நடைமுறைக்கு ஏற்ப முதலீட்டளர்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்க புதிய தொழில் கொள்கை விரைவில் வெயிடப்படும்.
தொழில் துறை உபயோகத்தில் உள்ள தொழில் நில பயன்பாட்டை மேம்படுத்த தொழில் நிறுவனங்களுக்கான தரைதளக் குறியீடு ஒன்றிலிருந்து ஒன்றரையாகவும், மனைப் பரப்பளவு 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
படித்த வேலையில்லா இளைஞர் வேலை வாய்ப்பு திட்டப் பயன்களை விரிவுபடுத்தும் வகையில் திட்ட முதலீட்டிற்கான வரம்பு 10 இலட்சம் ரூபாயில் இருந்து 15 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த மானியத்தின் வரம்பு 1.25 லட்சம் ரூபாயிலிருந்து, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் நிறுவனத்திற்கான நிதி ஒதுக்கீடு 33 கோடி ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீன மயமாக்க திட்டம் மற்றும் கடன் உத்தரவாத நிதிக்குழு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி மானியம் 3ல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்.
நலம் சார் வளத்திட்டங்கள்:
விழுப்புரம் மாவட்டம் அழகன் குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரைக் குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் 3856 கோடியில் மீன் பிடித்துறை முகங்கள் அமைக்கப்படும்.
காற்றாலை, சூரியமின்சக்தி மின் நிலையங் களின் மின் உற்பத்தியையும், உயரழுத்த நுகர்வோரின் மின் பயன்பாட்டையும் கணக்கிட தானியங்கி கணக்கீட்டு கருவிகளை நிறுவும் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக செயல்படுத்தி உள்ளது.
பட்ஜெட் மதிப்பீடுகளில் எரிசக்தித்துறைக்கு 20 ஆயிரத்து 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய கட்டமைப்பு பட்டியலில் தமிழகத்திற்குப் பயனளிக்கும் வகையில் 8.58 லட்சம் கோடி ரூபாய் செலவில் 179 திட்டங்கள் சேர்க்கப் பட்டுள்ளது.
புதிய மின் வாகன தொழில்நுட்ப பயிற்சி அறிமுகம்:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழக்கற்றுப் போன படிப்புகள் நீக்கப்பட்டு பப்பட்டு தொழிற்துறையினரின் தேவைக்கேற்ற பயற்சிகளை வழங்கும் பயிற்சிகளை சேர்த்து ரூ.17.80 கோடி செலவில் தொழிற்பிரிவுகள் டி செலவில் கொமிற்பிரிவுகள் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.4.77 கோடி செலவில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மின்வாகன தொழில் நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தொழில் துறையினரின் கருத்து... தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்:
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்துக்கான நிதி, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்ட மூலதன மானிய உயர்வு, புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்குதல் போன்றவை வரவேற்கத்தக்கவை.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்:
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருப்பது வெகுவாக வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த மதுரை, தூத்துக்குடி தொழில் பெருவழிச் சாலை திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் குறிப்பிடப் படாதது ஏமாற்றமே.
தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்:
வேளாண்மை , மீன் வளம், தொழில், தொல்லியல்,சிறு,குறுந்தொழில்வளர்ச்சிகளுக்கும், எரிசக்தித் துறைக்கும் நிதி ஒதுக்கீடு மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோன்ற கருத்துகளையே தென்னிந்திய வர்த்தக சபை சென்னை தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, சென்னை மாவட்ட சிறு தொழில் கூட்டமைப்பு போன்றவைகளும் குறிப்பிட்டுள்ளன.
நமது பார்வையில்....
நிதி நெருக்கடி இருந்தாலும் வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. நிதி நெருக்கடி நிதி நெருக்கடியில் அரசு இருப்பதால் இலவச அறிவிப்புகள் இல்லா அறிவிப்புகள் இல்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது அமைந்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.
மக்களின் கருத்துக்களை பல ஊடகங்களும் கேட்டு வெளியிட்டுள்ளன. அவர்கள் தெரி விக்கும் ஒட்டு மொத்தமான கருத்து இதுதான். நல்ல அறிவிப்புகள் மக்களை முழுமையாக சென்றடைந்தால் தான் அது வெற்றிகரமான பட்ஜெட்.
- ஜே.கே.மாறன்.