தடுப்பூத்தயாரிப்பில் அசத்தும் இளம் தொழில் அதிபர் அதர் புனாவல்லா!

1981ல் பிறந்தவர் அதர் புனாவல்லா . 39 வயதான இவர் பூனாவைச் சேர்ந்தவர். பட்டப்படிப்பை இங்கிலாந்தில் படித்தவர். உலகிலேயே மிகப்பெரிய (Serum Institute Of India)தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இந்நிறுவனம் 1966ல் இவரது தந்தை டாக்டர் சைரஸ் புனாவல்லா அவர்களால் துவக்கப்பட்டதாகும்.


      140 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம்:


இவர்களது தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் முதலில் (Serum Institute of India) 35 நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வந்தது. 2001ல் அதர் புனாவல்லா பொறுப்பேற்ற பின்னர் புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய உரிமம் பெற்றார்.


உலக சுகாதார அமைப்பு, ஜக்கிய நாடுகளின் பன்னாட்டு சிறுவர்களுக்கான அவசர கால உதவி (UNICEF) ஆகியவற்றின் நன்மதிப்பை பெற்றார். தற்போது 140 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இவர்களது மொத்த வருவாயில் 85 சதவீதம் வெளிநாட்டு ஏற்றுமதியில் இருந்து ஈட்டப்படுகிறது.


முதன்மை செயல் அதிகாரியான அதர் புனாவல்லா தனது நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளை தன் முழுகட்டுப்பாட்டில் வைத்து உள்ளார். நெதர்லாந்து தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை கையகப்படுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும் சர்வதேச அளவிலான தடுப்பூசி தயாரிக்கும் அமைப்புகளில் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். இவரது நிறுவனம் போலியோ சொட்டு மருந்து விற்பனையில் நிகரற்ற இடம் வகிக்கிறது.


 


 


                  ஆண்டுதோறும் புதிய தடுப்பூசி அறிமுகம்:


ஆண்டு தோறும் மருத்துவ உலகில் புதிய உயிர்காக்கும் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க திட்டமிடுகிறார்கள். புதிய தடுப்பூசிகளை அறிமுகம் செய்கின்றனர். டெங்கு, சளிக்காய்ச்சல் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் (Dengue, Flu and Cervical Cancer) உள்ளிட்ட மனிதகுலத்திற்கு சவாலாக உள்ள பல நோய்களுக்கு தடுப்பூசி தயாரிப்பதில் சந்தைப்படுத்துவதில் இறப்புவீதத்தை குறைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்.


                           அனைவருக்கும் ஆரோக்கியம்:


“அனைவருக்கும் ஆரோக்கியம்” என்பதே இவர்களது நோக்கமாகும். வணிகம், மனிதநேயம் மற்றும் கொடைத்தன்மைக்காக சர்வதேச அளவில் இவர்களது நிறுவனத்திற்கு பரிசுகளும், பாராட்டுகளும், விருதுகளும் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


                               வெளிநாட்டு விருந்தினர்கள்:


இந்தியா வரும் வெளிநாட்டு முக்கிய பிரபலங்கள் இவரது நிறுவனத்திற்கு விஜயம் செய்வதற்கு பெரிதும் விரும்புகின்றனர்.2013ல் வேல்ஸ் நாட்டு இளவரசர் சார்லஸ் இந்நிறுவனத்திற்கு வருகை தந்து விருந்து உபசரிப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


                                 நிமிடத்திற்கு 400 தடுப்பூசிகள் :


அதர் புனாவல்லா அவர்களது நிறுவனத்தின் நிகர மதிப்பு 8 லட்சம் கோடிகளை தாண்டுகிறது. இவரிடம் சொந்தமாக விலை உயர்ந்த 50க்கும் மேற்பட்ட சிற்றந்துகள் (கார்கள்) உள்ளன. உலகில் பிறக்கும் குழந்தைகள் போட்டுக்கொள்ளும் தடுப்பூசிகளில் ஒரேயொரு தடுப்பூசியாவது இவர்களுடையதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


யாராலும் தாக்கில் இவர்களுடன் போட்டியிட முடியாத நிலையே இவர்களது வெற்றிக்கு முக்கிய காரணமாகும். அர்ப்பணிப்பு உணர்வு மிக்க பணியாளர்களைக் கொண்டுள்ளனர். இவர்களது தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளில் ஒதுக்கித்தள்ளவோ, நிராகரிக்கவோ முடியாத நிலையே உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 400 தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்கின்றனர்.


ஆண்டுதோறும் 1.5 பில்லியன் அளவிலான தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கின்றனர். சர்வதேச அளவில் 70 சதவீத தடுப்பூசிக்கான தேவைகளை இவர்கள் பூர்த்தி செய்கின்றனர்.


                                             குளிர் அறை:


அத்தியாவசிய தடுப்பூசிகளை பாதுகாக்க பல விதமான குளிர் அறைகளை அமைத்து உள்ள னர். (-20° c to -30°C). 30 முதல் 40 கோடி அளவிலான தடுப்பூசிகளை இருப்பில் வைத்து பாதுகாக்கின்றனர். குறுகிய கால அவகாசத்தில் தொற்று நோயை தடுக்கத் தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உலக நாடுகள் சார்ந்து இருப்பது இவர்களது நிறுவனத்தை தான்.


ஏதாவது பிழை ஏற்பட்டு விட்டால் உற்பத்திப் பொருள்களை உடனே அழித்து விடுவார்கள். நவீன காலத்தின் தேவைக்கேற்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் முன்னணி இடத்தை வகிக்கின்றனர். சர்வதேச அளவில் இறப்பு வீதத்தை குறைப்பதில் இவர்களது பங்களிப்பு அலாதியானது.


 5 லட்சம் முதலீட்டில் 1966 ல் தொடங்கப்பட்ட நிறுவனம் 50 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து உள்ளது. தொடக்க காலத்தில் பல்வேறு சவால்களை சந்தித்து உள்ளனர். போதிய அளவில் மின் சார வசதி இன்மை , பாதுகாப்பான குடிநீர் இல்லாமை, போதிய நிதி வசதியின்மை அரசிடம் அனுமதி பெறுவதில் காலதாமதம் உள்ளிட்ட பல சவால்களை கடந்து வந்துள்ளனர்.


குளிர் அறை வசதி பற்றாகுறை காரண மாக ஆண்டுதோறும் 25 சதவீத தடுப்பூசி மருந்துகள் வீணாகின்றன என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். 


ஒரு வெளிநாட்டு உற்பத்தியாளர் வெகு எளிதாக இந்திய சந்தையில் நுழைந்து தடுப்பூசிகளை விற்பனை செய்ய முடிகிறது. அவர்களுக்கு இந்தியாவில் கண்காணிப்பு, தரபரிசோதனை மற்றும் சம்பிரதாயங்கள் கடுமையானதாக இல்லை.


ஆனால் ஒரு இந்திய நிறுவனம் தனது உற்பத்தியை வெளிநாட்டு சந்தையில் விற்பனை செய்ய கடுமையான சம்பிரதாயங்கள், தரபரிசோதனை மற்றும் கண்காணிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதேயதார்த்தம்.


நமது தொழில்நுட்பங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் காள்ள வேண்டும். அவர்களடன் 50 சதவீத பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்பது போன்ற பல இடர்பாடுகள் இந்திய நிறுவனங்களுக்கு உள்ளன.


                           பத்தாவது உலக பணக்காரர்:


உலக பணக்காரர் பட்டியலில் அதர் புனாவல்லா பத்தாவது இடத்தை வகிக்கிறார். இவரது சொத்து மதிப்பு 55680 கோடியைத் தாண்டுகிறது. தனது 20ஆவது வயதில் இந்த துறையில் நுழைந்தார். புதிய தொழில் நுட்பங்களை ஆசிய, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இருந்தும் பெற்றுக் கொள்கிறார்கள்.


தனது துறையில் கல்வியை விட அனுபவ வாயிலாக கற்றுக் கொண்டதே அதிகம் என்கி றார். ஆண்டுதோறும் சுமார் 360 மில்லியன் டாலர் லாபத்தை ஈட்டுகின்றனர். புதிய தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு 150 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்கின்றனர்.


குப்பைகளை, கழிவுகளைக்கண்ட இடத்தில் போடுவதால்தான் ஆரோக்கியமற்ற நிலை உருவாகிறது. அபாயகரமான (Bacteria, Virus, Mosquito and flies) நுண்ணுயிரிகள், விஷக் கிருமிகள், ஈக்கள், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யுமிடமாக குப்பைமேடுகள் மாறி விடுகிறது. நிலத்தடிநீர் தரம் மாசுபடுகிறது. 3 இதை நாம் தவிர்க்க வேண்டும்.


போலியோவை உலகை விட்டு ஒழிப்பதில் இவர்களது பங்கு நிகரற்றது. இவர்களது தயாரிப்புகள் (Tetanus, Polio, Measles, Mumps, Rubella, Anti-Snake Venom serum , Diphtheria, BCG, Hepatitis)உலக அளவில் நோய்த் தொற்றிலிருந்து கோடிக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றுகிறது.


வெளிநாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து தடுப்பூசிகள், உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்த நிலை மாறி குறைந்த நியாயமான விலையில் உள்நாட்டில் கிடைக்கும் அளவுக்கு தன்னிறைவு பெற்று உள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை . இவர்கள் பெருமைக்குரிய இந்தியர்கள் . நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். வளர்க இவர்களது பணி.                                         நாமக்கல் - தி.சுவாமிநாதன்