புரட்டாசி, கார்த்திகை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சாய்பாபாவை வழிபடுபவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு .
அது என்னவென்றால் அன்று கறி விருந்துக்கும் போக முடியாது. அசைவம் சாப்பிட முடியாது என்ற கவலையுடன் இருந்த உங்கள் துயரம் ஓடிப்போகும் காலம் இதோ உருவாகிவிட்டது.
வெஜிடேரியன் இறைச்சி:
ஆமாம் சார், கவலையைவிடுங்கள். எப்போதும் நினைத்த நேரமெல்லாம் பிடித்த கறியை நீங்கள் சாப்பிட முடியும். உங்களுக்குப் பிடித்தது என்ன? கோழிக்கறியா, ஆட்டுக்கறியா? இல்லை வெஜிடேரியன் ஆட்டுக்கறியா?
இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிட முடியும்? என்னடா இது புதுக் கதையாக இருக்கிறது என்றா எண்ணுகிறீர்கள்?
மனிதர்களின் தினசரி வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கியமான சத்துக்கள் மூன்று என்கிறது மருத்துவ அறிவுரை. அவை கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு என்பவை.
சீரான உணவுமுறை என்பது கீழ்க்கண்ட விகிதாச்சாரத்தில் அமைய வேண்டும். அதாவது உங்கள் உணவின் பெரும் பகுதி புரதசத்து தருவதாக இருக்க வேண்டும். மேற் கண்ட இந்த குறிப்பின்படி நீங்கள் புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாமிசத்தில் உள்ள சத்துக்கள்:
சீரான உணவு முறை என்ற கணக்கில் நீங்கள் அரிசிச் சோறு சாப்பிடுமளவு சிக்க னும், சிக்கன் சாப்பிடுமளவு சிக்கனமாக அரிசிச் சோறும் சாப்பிட்டால் அது உடலுக்குப் போதுமானது.
நாம் சாப்பிடும் புரதமானது நம் உடலின் திசுக்கள் வளரவும் மூளை ஆற்றல் பெருகவும் உதவுகிறது. ஆதிகாலத்தில் சிறிதாக இருந்த மனித மூளை, கறியை சுட்டு உண்ணத் தொடங்கியதும் தனது அறிவுமிகு மனித இனமாக (ஹோமோ சாப்பியன்) என உருவானான் என்கிறது ஒரு பரிணாமவியல் தத்துவம்.
குறிப்பாக உலக மக்கள் தொகைக்கே புரதச் சத்து கொடுக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. மாமிசத்திற்காக ஆடு, மாடுகளை வளர்ப்பதென்பது மிகச் சிரமமானது.
ஒரு கிலோ பன்றி, மாடு, ஆட்டுக்கறி உருவாக சுமார் 1400 லிட்டர் தண்ணீர் வீணாகிறதாம். அந்த மிருகங்கள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் காரணமாக ஓசோனில் (வான்வெளி மண்டலத்தில்) ஓட்டை விழுகிறது.கேள்வி. ஆம் இந்த ஐடியாதான் செடிகளிலிருந்து பெறப்படும் செயற்கைப் புரதத்தின் சூத்திரம்.
இதில் இன்று உலகின் பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. முக்கியமாக உலகின் நம்பர்-2 பணக்காரர் எனப்படும் பில்கேட்ஸ் இதில் பல கோடிகளை முதலீடு செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதாவது செடிகள், காய்கறிகள் கொஞ்சம் ரசாயனங்களின் உதவியுடன் பின்வரும் இறைச்சிகள் உருவாக்கப்படுகின்றன. ஆடு, மாடு, கோழிக்கறியின் சுவையை செயற்கையாக மேற்கண்ட கலவையில் உருவாக்கி விட முடியும்.
கறியின் பதம் எப்படி?
மாமிசத்தை சாப்பிட என்னென்ன செயல் முறைகளை கடைபிடிக்கிறோம்? மாமிசத்தில் உள்ள சர்க்கரை, கொழுப்பு, மற்ற பிற அமினோ அமிலங்கள் போன்றவை கொதி சூட்டில் பிரியும்.
அப்படி பிரியும் போது அதிலிருந்து பலவித இரசாயனங்களை அது உருவாக்கும். அதை - மில்லர்ட் ரியாக்ஷன் என்று அழைப்பார்கள். இந்த குணம், பதம்தான் கறியை இளகச் செய்கிறது.
இப்படிப்பட்ட புதிய வகை ரசாயனங்களின் கூட்டானது நாம் சேர்ந்த எண்ணெய், காரம் போன்றவைகளோடு கலந்து நம் நாவில் படும்போது பல சுவைகளை உணரச் செய்கிறது. இளகிய கறியும் திரியாக, ஜவ்வுகளாக நாவில் நின்று இறங்குகையில் மாமிசம் தின்ற உணர்வு நமக்கு ஏற்படும்.
செயற்கை மாமிசம்:
செயற்கை மாமிசத்தை உருவாக்க, அதாவது ஆடு, பன்றி, மாட்டுக்கறி போலவே அது இருக்க கீழ்க்கண்ட மூலப்பொருள்கள் தேவை.
சோயா, பீன்ஸ், பயிற்றம்பருப்பு, பச்சைப் பட்டாணி, அரிசி போன்றவற்றை மசிக் கிறார்கள். அப்படி அதிலிருந்து எடுக்கும் புரதங்களுடன் தேங்காய் எண்ணெய், கோகோ எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை கலந்து கறியை உருவாக்குகிறார்கள்.
இன்னும் உங்களுக்கு செயற்கை மாமிசத்தில் சந்தேகம் உண்டல்லவா இதோ அதற்கான பதில் பீட்ரூட் சாறு சேர்த்து விட்டால் கண்ணுக்கு சிவப்பான கறி உருவாகிவிடும்.
கோழிக்கறிக்கான பார்முலாவும் உண்டு. எந்தக் கறி உங்களுக்குத் தேவையோ அதனை தயாரித்துக் கொடுத்துவிடுவார்கள். நாளாவது கிழமையாவது கறி சாப்பிட்டுக் கொண்டே இருங்கள்.
மைக்ரோ பயாலஜி தெரிந்தவர்களுக்குப் புரியும். நாம் உண்ணும் செடிகளில் கூட மைக்ரோ உயிரினங்கள் வாழ்கின்றன. செடிக்கும் உணர்வுகள் உண்டு என்கிறது ஆய்வு.
பலரும் வரவேற்கிறார்கள்:
மேற்கண்ட இந்த செயற்கை மாமிசத்தில் துளியளவு கூட கவுச்சி எனப்படும் குணம் இல்லை. குறிப்பாக இவ்வகை புரதங்களை தயாரிக்கும் போது சில, பல பாக்டீரியாக்களும் அதில் கலக்க வேண்டி வரும்.
மாமிசத்துக்கு இறைச்சித் தன்மையை கொடுக்கும் சில உயிரினங்களே புரதம் உரு வாகவும் காரணமாகிறது. செடிகளில் புரதம் வரவும் சில வகை நுண்ணுயிரிகளே காரணம். இதன் காரணமாக வெஜிடேரியன் இறைச்சியில் சிலவகை நுண்ணுயிரிகள் சேர்க்கப் படுகின்றன. அது எப்படி என்றால் இட்லி மாவில் ஈஸ்ட் பாக்டீரியா இருக்கிறதல்லவா? அது போல.
சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத செயற்கை மாமிசம் சைவப்பிரியர்கள், சூழலியாளர்கள் போன்ற பலராலும் பாராட்டப்படுவதால் சந்தையில் இதற்கு வரவேற்பும் அதிகம். நம்மூரிலும் இதுவிரைவில் அறிமுகமாகிவிடலாம்.
- செங்கை செல்வன்.