தொடர் இழப்புகளிலும் தொடர்ந்து சாதித்த சாதனையாளர் சிதம்பரம் செட்டியார்

 இந்தியத்தொழில் வரலாற்றில் சிறந்த வளர்ச்சி பெற்றவர்கள் என்றால் நகரத் தாரைத் தவிர வேறு யாரையும் குறிப்பிட முடியாது. கடல் கடந்து உழைத்து, சிறிது சிறிதாக சேர்த்த தொகையையும், சொத் தையும் இழந்து அந்த நாடுகளில் இருந்து அவர்கள் அனாதை போல நடந்து தாயகம் திரும்பிய நிகழ்வு மிகவும் கொடுமையானது.


                                    இழப்பும் மீண்டபெருமையும்: 


பர்மாவில் நகரத்தார்கள் 180-களில் பெரிய தொழில் பேராசையே தொடங்கி வளர்த்த கடின உழைப்பு அவர்களுடையது. இரண்டாம் உலகப்போரின் சூழலில் பர்மாவை புரட்டிப் போட்ட அரசியல் முரண்களால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை பறிகொடுத்து அவர்கள் தாயகம் திரும்பினர்.


அப்படிப்பட்ட சூழலில் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை பறிகொடுத்தார் அண்ணா மலை அரசர். 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அடுத்து பறிகொடுத்தவர் எம்.சிடி.எம்.சிதம்பரம் செட்டியார் குடும்பம்.


ஆனாலும் கையிலிருந்த சொற்பத் தொகையிலும் பூர்வீகமான அசையா சொத்துகளின் மூலம் மீண்டும் தலை நிமிர்ந்தார்கள். சமூகப் பெருமையை அந்த வகையில் மீண்டு கூடுத லாக்கி மிளிர்ந்தார் சிதம்பரம் செட்டியார் அவரைப் பற்றி விளக்கமாக அறிவோமா?


                               குடும்ப வரலாறு அறியலாம்:


ராஜாசர் அண்ணாமலையின் மூத்த சகோதரர் தான் சிதம்பரம் செட்டியார். அவருக்கு இரண்டு மகன்கள்.


முதல் மகனான முத்தையா செட்டியார் சென்னையின் செரீப் ஆக இருந்த வ பெருமைக்குரியவர். இரண்டாவது மகன் பெத்தாச்சி செட்டியார். கரூருக்கும் பக்கத்தில் இருக்கும் ஆண்டிப்பட்டியின் ஜமீன்தாரர்.


எட்டாம் எட்வர்ட் அரசர் சென்னைக்கு வந்த 1922-ல் அவருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பை அளித்தார் முத்தையா. பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி கௌரவம் செய்தது.


'சர்' முத்தையா செட்டி யாருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் சிதம்பரம் கானாடு காத்தானில் 1908 ஆம் ஆண்டில் பிறந்தார். நாற்பது வயதை எட்டிய போது சர் முத்தையா செட்டி யார் எதிர்பாராத மரணத்தை சந்தித்தார்.


அப்போது சிதம்பரம் செட்டியாருக்கு வயது 21-தான் ஆகியிருந்தது. வாய்ப்பு மிகுந்த தேடல்களுடன் உழைக்கத் தயங்காத உற்சாக முகத்துடன் வலம் வந்த அவருக்கு பள்ளிப்படிப்பு என்பது திண்ணை பள்ளிக் கூடத்தில் தான். பின் சென்னை மெட்ராஸ் கிறிஸ் டியன் காலேஜ் ஹைஸ்கூலில் மேல்படிப்பு படித்தார்.


செட்டியார் வீட்டுப் பிள்ளைகளுக்கு முக்கியமான கல்வி என்பது வீட்டில் அளிக்கப்படும் நடைமுறைப் பயிற்சிதான். அதனால் பிற்காலத்தில் அவர்கள் தொழிலில், தொழில் சார் வர்த்தகத்தில் பிற்காலத்தில் சிறந்து விளங்க அதுவே அடிப்படையான முக்கிய காரணமாகவும் இருந்தது. சிதம்பரமும் இந்தப் பயிற்சி யை ஆர்வத்துடன் கற்றார். அது தான் எதிர்காலத்தில் அவருக்கான உச்சத்தை பல சிறப்புகளுடன் அவர் பெறக் காரணமும் ஆனது.


தனது வாழ்நாளில் பள்ளிப் படிப்பை முடிக்காத மாணவன் சாதித்தவை பல. ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம், ஒரு வங்கி இரண்டையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய சாதனையையும் நிகழ்த்தினார் இவர். இப்படி அவரால் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் பல.          


                                    யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்:


யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை 1906-ஆம் ஆண்டில் தொடங்கி நடத்திவந்தவர் விஜயேந்திர ராவ் என்பவர் குறைந்த செலவில் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஏழைகளுக்கும், மத்திய தர மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அது இயங்கி வந்தது.


விஜயேந்திர ராவ் 1922 ஆம் ஆண்டில் இறந்துபோக அந்நிறுவனம் நிலைதடுமாற ஆரம்பித்தது. அந்த நேரத்தில் நிறுவனத்திற்கு உதவ முன் வந்தவர் சிதம்பரம் செட்டியாரின் தந்தை எம்.சிடி.முத்தையா செட்டியார். 1929 ஆம் ஆண்டில் இவரும் இறந்து போனபோது சிதம்பரம் செட்டியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல் உருவானது.


தலைமைப் பதவியை சிதம்பரம் செட்டியார் ஏற்றவுடன் அதன் வளர்ச்சியில் தனிகவனம் செலுத்தினார். அதனால் அதுவரை காணாத பெரும் வளர்ச்சியை அந்நிறுவனம் கண்டது. தென் இந்தியாவில் மட்டுமே செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளிலும் அலுவலகங்களைத் திறந்து வெற்றி கரமான வளர்ச்சியில் விரைந்தது.


புதிய, புதிய பாலி சிகளை அறிமுகப்படுத்தி நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் விரைய வைத்தார் அவர். 1932 ஆம் ஆண்டில் யுனைடெட் இந்தியா நிறுவனம் வெள்ளி விழா கொண்டாடியபோது சில்வர் ஜூப்ளி பாலிசி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.


அந்த பாலிசி அறிமுகப் படுத்தப்பட்ட24 மணி நேரத் தில் வசூலான தொகை எவ்வளவு தெரியுமா? 10 லட்சம் ரூபாய். இது அந்த காலத்தில் சாதாரண தொகையா என்ன ? "


அதோடு நின்றாரா சிதம்பரம். ஆயுள் காப்பீடு பாலிசிகளைத்தர யுனைடெட் இன்சூரன்ஸ் இருக்கிறது. ஜெனரல் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குவதற்காக யுனைடெட் இந்தியா ஃபயர் அண்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். தென் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஜெனரல் இன்சூ ரன்ஸ் நிறுவனம் அது தான் என்பதும் குறிப் பிடத்தக்கது.


எல்.ஐ.சி நிறுவனம் 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட போதே யுனைடெட் இந்தியா, நியூ கார்டியன் லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய இரண்டும் எல்.ஐ.சியுடன் | இணைக்கப்பட்டன.


1953-ல் நடந்த ஆடிட் ஜெனரல் மீட்டிங்கில் சென்னை அண்ணா சாலையில் உள்ள 14 மாடி கட்டுமான திட்டத்தை அறி வித்த சிதம்பரம் பொன்விழா ஆண்டை யுனைடெட் இந்தியா கொண்டாடும் போது தயாராகும் என உறுதி அளித் தார். அவ்வாறே முடித்தும் காட்டினார். ஆனால்.....


ஆனால் என்ன? அந்த ஆண்டு தான் இந்தியாவின் இருந்து வந்த எல்லா இன்சூரன்ஸ் நிறுவனங் களையும் அரசுடைமை ஆக்கியது இந்திய அரசாங்கம்.


பாடுபட்டு வளர்த்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரே நாள் இரவில் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. நாட்டுக்கு அது தேவையானதாக இருக்கலாம். ஆனல் அதை பார்த்துப் பார்த்து வளர்த்த சிதம்பரம் செட்டியார் குடும்பத்திற்குப் பெரிய இழப்புதான் என்பதை நாம் மறுக்க முடியுது.


                                         வங்கிகளின் வளர்ச்சியில்...


தமிழ்நாட்டில் பல கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட்டது 1910களின் கால கட்ட த்தில் தான். 1901-ல் தஞ்சாவூர் பேங்க், 1903-ல் திருநெல்வேலியில் சவுத்பேங்க், 1904-ல் கும்பகோணம் சிட்டியூனியன் பேங்க், 1905-ல் மெட்ராஸ் சென்டரல் யூனியன் கோ-ஆப்ரேடிவ் பேங்க் என எல்லாமே அப்போது தான் தொடங்கப்பட்டன.


ஆனால் நமக்கென ஒரு பெரிய வங்கி வேண்டும் என்ற எண்ணத்தில் தொங்கப் பட்டது தான் இந்தியன் பேங்க். அதன் தொடக்க காலத்தில் இருந்தே அங்கு நகரத்தார்களின் ஆதிக்கமே நிலவிவந்தது.


1929-ஆம் ஆண்டில் இந்தியன் வங்கியின் போர்டு உறுப்பினர் 47 பேரில் 22 பேர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் . சிதம்பரம் செட்டியாரின் தந்தை சர்' முத்தையா செட்டியமும் அதில் ஒருவர் அவர் இயற்கை எய்திய பிறகு அந்த பதவி சிதம்பரம் செட்டியாருக்கு வந்து சேர்ந்தது.


இந்தியன் வங்கியானது நல்ல வளர்ச்சியில் இருந்தாலும் அதை மேலும் வளர்க்க வேண்டும் என கூடுதல் ஆர்வம் காட்டினார் அவர் முக்கியமாக பர்மா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என எல்லா நாடுகளிலும் கிளை அலுவலங்கள் திறக்கும் எண்ணத்துடன் செயல் பட்டார் அவர்.


                                           சாதனை நோக்கத்தில்...


ஆனால் அவருடைய நோக்கத்தை இந்தியன் வங்கி மூலம் செய்ய முடியாத நிலையில் புதிய வங்கியான 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை' அவர் தொடங்கினார். அது தொடங்கப்பட்ட ஆண்டு 1936 நவம்பர் 20-ஆம் தேதி. அப்போது சிதம்பரம் செட்டியாரின் வயது 30-தான்.


அந்த வங்கி (IOB) சில ஆண்டுகளில் தனது கிளை களை இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, அகமதா பாத், அமிர்தசரஸ், கொச்சி எனவும், பர்மா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், ஹாங்காங் என வெளிநாடுகளிலும் தொடங்கி நடத்தியது. 1946-ல் அமெரிக்கா, இங்கிலாந்திலும் கிளைகளை திறந்தது ஐ.ஓ.பி.


1936-ல் இந்தியன் ஓவர் சீஸ்வங்கி 25 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்து. 1969-ல் இந்திய அரசு வங்கிகளை தேசிய உடைமயாக்கிய போது ஐ.ஓ.பி-யை எடுத்துக் கொண்டது. இப்போதும் இழப்பை சந்தித்தது சிதம்பரத்தின் குடும்பம்.


இந்தோனேஷினாவின் ஜகார்த்தாவில் 1954 ஆம் ஆண்டு ஐ ஓ பி | கிளையைத் தொடங்குவது தொடர்பாக சென்ற சிதம்பரம் செட்டியார் சென்ற விமானம் தரையிறங்கும் போது நடந்த விபத்தில் பயணம் செய்த அனை வருடன் 46 வயதில் அகால மரணம் எய்தினார். இழப்பிலும் கலங்காது வெற்றிகண்டு வந்த ஒரு | சாதனை மனிதர் எம்.சிடி.எம். சிதம்பரம் செட்டியார்                                 . - தஞ்சை என்.ஜே.கந்தமாறன்.