2005-ஆம் ஆண்டு முதல் தானே ஆய்வு செய்து அறிந்த நினைவாற்றல் பயிற்சிகளை வழங்கி வரும். டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி 2007-ஆம் ஆண்டு முதல் 'இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டைனமிக்ஸ்' நிறுவனம் மூலம் இந்திய அளவில் இன்று பரவலாக வழங்கி வருகிறார்.
அவர் தரும் பயிற்சி பற்றியும் அது தொடர்பாக தொழில்முனைவோருக்கு தரும் தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் விரிவாக நம்மிடம் பேசினார் அது தொடர்பான தகவல்கள்.
சென்னையில் பயிற்சி
'முப்பரிமான நினைவாற்றல் கலை' என்ற தனது மூளையின் திறன் வளர்க்கும் மன வளப் பயிற்சிகளின் மூலம் சிறப்பான எதிர் காலத்தை உருவாக்கி வருகிறோம்.
கல்வி முறையில் இப்போது இந்திய அளவில் நடைமுறையில் போட்டித் தேர்வு கள் என்பவை பெருமளவில் அனைத்து நிலையிலும் இடம் பெற்றுள்ளனன.
அதில் பங்கேற்று வெற்றி பெறுவது கடினமானது என பல மாணவர்கள் தயங்கிய நின்ற நிலையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் அப் மைண்ட் டைனமிக்ஸ் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் அதில் சிறப்பான தர மதிப்பீடுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்த தரமான பயிற்சிகளை எங்கள் பகுதியிலும் வழங்குங்கள் எனப்பலர் கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழத்தின் மாவட்டத் தலைநகர்களில் இந்தியன் இண்ஸ்டிட்யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் வழங்கி வருகிறது.
முக்கியமாக பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் போட்டிகளை மாணவர்கள் உற்சாதகத்துடன் சந்திக்கும் வகையிலான ஒரு நாள் பயிற்சியை சென்னையில் இந்த ஜனவரி மாதம் நடத்த உள்ளோம். தொடர்புக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறார். டாக்டர்.D.கிருஷ்ணமூர்த்தி (98867 03172).
'மைண்ட் டைனமிக்ஸ்' என்பது மூளையின் வளம் சார்ந்த தொடர்பினைக் கொண்டது. மனவளம் என்பது மூளையின் நலத்தின் வழி அமைவது. மூளையின் வளம் என்பது நினைவாற்றல் திறன் மேம்பாட்டால் உருவாகுவது. அதற்குத்தக்க பயிற்சிகள், அதன் செயல்பாடுகளைச் சார்ந்தே அது அமையம். அத்தகைய இயல்பான பக்குவமான பரிணாம வள வளர்ச்சியை தனது பயிற்சிகளில் மூலம் அனைவருக்கும் கற்பிக்கறோம்.
நினைவாற்றல் கலைப் பயிற்சிகள் மூலம் பலர் தங்களின் வாழ்வில், தொழிலில் படிப்பில் பதவி உயர்வில் மிகப் பெரிய உச்சங் களை தொட்டுக் கொண்டே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நினைவாற்றல் பயிற்சி என்றால் அது படிக்கும் மாணவர்கள் தொடங்கி அனை வருக்கு மானதே எனக்குறிப்பிடும் அவர் நினைவாற்றல கலைப் பயற்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு முயற்சிப்போர், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட விரும்பு வோர், பதவி உயர்வு எதிர் நோக்கு பவர், இல்லத் தரசிகள் என அனைவருமே கணிசமாக கலந்து கொண்டு பயன் பெறுகிறார்கள்.
கல்வியாளர்கள் பலரின் பாராட்டுதல் களைப் பெற்றுள்ள இந்த நினைவாற்றல் கலைப்பயிற்சிகளின் சிறப்பம்சமே நினைவில் பதித்தல் (Registry) நினைவில் வைத்து (Retain) நினைவு படுத்துதல் (Recall) என்றபடி மனித மூளையின் செயலாற்றலை ஊக்கப்படுத்தி வெளிக் கொணரும் விதத்தில் அமைந்துள்ளது என்பது தான்.
வரவேற்கும் பல்கலைக் கழகங்கள்:
தங்கள் மாணவர்களும் சிறந்த நினைவு வளம் பெற்று உயர்ந்து விளங்க வேண்டும் என எண்ணுகின்ற கல்வி நிலையங்கள் ணுகின்ற கலவி நிலையங்கள் பல எங்களை விரும்பி அழைக்கின்றன. சேலம் விநாயகா மிஷன் நடத்தும் பல கல்வி நிலையங்களில் எங்களின் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பேராசிரியர்கள் பலருக்கும், அவரவருக்குத் தேவைப்படும் சிறப்புத் தன்மையில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். பல்கலைக் கழகங்கள் பல இந்தப் பயிற்சிகளை வரவேற்கின்றன.
தனியுரிமைக் கிளைகள்:
நினைவாற்றல் திறன் மேம்பாட்டிற்காக "க நாங்கள் வழங்கும் சிறப்புப் பயிற்சி வகுப்பு களின் தனித்துவம் இத்துறையில் ஈடுபட பலரையும் ஈர்த்துள்ளது. அதனால் பலர் எங்கள் இன்ஸ்டிட்யூட்டின் தனியுரிமைக் கிளைகள் (பிரான்சைஸி) தொடங்க அனுமதி கேட்டுவருகின்றனர்.
அப்படி தனியுரிமைக் கிளைகள் நடத்திட விரும்பு வோர் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் விவரங்கள் பெறலாம். போதிய அளவிற்கு ஆங்கிலம் பேசிட, எழுதிட அறிந் திருந்தால் எளிதாக பயிற்சியைப் பெற்று குறைந்த முதலீட்டிலேயே தனியுரிமைக் கிளைகளை தொடங்க முடியும்.
அவர்களுக்குத் தேவையான உரிய வழிகாட்டல்கள் தலைமை மையத்தின் விளம்பரங்களில் அந்தக் கிளை மையங்களின் பெயர் களைக் குறிப்பிடுதல், மூன்று மாதங் களுக்கு ஒரு முறை நேரடி பார்வையில் ஆக்க பூர்வமான ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி உதவுகிறோம்.
அப்படியான தனியுரிமைக் கிளைகளில் கருத்தரங்குகள், சிறப்புப் பயிற்சிகள் போன்றவற்றை நடத்திட வழிகாட்டி அதில் பங்கேற்று கிளைகள் மேலும் வளர்ச்சி பெற உதவுகிறோம்.
உலகளாவிய முறையில் கனடா, ஆஸ்தி ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் நினைவாற்றல் கலைப் பயிற்சிகளை வழங்க அடிக்கடி சென்று வருகிறேன் எனக் குறிப் பிட்டார். இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் நிறுவனமான நினைவாற்றல் கலை வல்லுநரான நினைவாற்றல் கலை வல்லுநரான டாக்டர்.D.கிருஷ்ணமூர்த்தி,
தொடர்புக்கு. 080-2667 8500, 98867 03172.
- ஜே.கே.மாறன்.