சமீப ஆண்டுகளில் இந்தியாவின் உள் நாட்டளவில் தொழில், வேலை வாய்ப்பு களுக்கு மிகவும் சாதகமான சூழல் இல்லை. இரண்டு துறைகளும் அதிக சவால்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக வேலை வாய்ப்புகள் இல்லாமை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக சில தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் ஏற்றுமதி வர்த்தகத்திலோ பல வழிகளில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் தான் நிலவி வருகிறது. அண்மையில் கூட அமெரிக்காவுக்கான ஏற்றுமதி கூடுதலாக $755 மில்லியன் அளவுக்கு நிகழ்ந்துள்ளது.
சீனாமீதான மனகசப்பால் தொடர்ந்து அதன் வர்த்தகம் சார்ந்த கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தி செய்து வருவதையடுத்து சீனா, அமெரிக்காவுடனான வர்த்தகத்தை குரைத்துக் கொள்ள இச்சூழல் இந்தியாவுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது.
அமெரிக்கா, சீனா மோதலால் அதிகரித்துள்ள அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியால் முக்கிய பொருட்களாக இருப்பவை இரசாயணங்கள், உலோகங்கள் மற்றும் தாது ஆகியவை. 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இரசாயணங்கள் ஏற்றுமதியானது $243 மில்லியன் வரையிலும் உலோகங்கள் மற்றும் தாதுக்கள் ஏற்றுமதி $181 மில்லியன் அளவுக்கும் நடைபெற்றுள்ளது.
மின்சார எந்திரங்கள் மற்றும் இதரவகை எந்திரங்கள் ஏற்றுமதி $68 மில்லியன் அளவிலும் நிகழ்ந்துள்ளது. இவை தவிர இந்திய வேளாண் உணவுகள் ஃபர்னிச்சர், அலுவலக எந்திரங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், போக்குவரத்து உபகரணங்கள் ஏற்றுமதியும் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
அமெரிக்கவர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைப்பின் ஆய்வுப்படி அமெரிக்க சந்தையில் சீனாவுக்கு ஏற்பட்ட $35 பில்லியன் ஏற்றுமதி இழப்பில் 62 சதவீதம் ஏறத்தாழ 521 பில்லியன்) ஏற்றுமதி வாய்ப்பு பிற நாடுகளுக்கு சென்று சேர்ந்துள்ளது.
அமெரிக்கா சீனாவின் வர்த்தகத்துக்கு நிர்ணயித்த கட்டண உயர்வு சுமார் 25 சதவீத ஏற்றுமதி இழப்பு சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது $35 பில்லியன் அளவு இழப்பு அமெரிக்க சந்தையில் சீனாவுக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உருவாகியுள்ளது.
அலுவலக எந்திரங்கள், தொடர்பு சாதனங்கள் துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இவ்வகை பொருட்களின் வர்த்தகம் 55 சதவீதம் வரை சரிந்துள்ளது.
அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில் பொருளாதார நிபுணர் அலெசாண்ட்ரோ நிசிட்டா (Alessandro Nicita) அமெரிக்காவில் நிலவும் இந்த சூழல் பற்றி கூறுகையில் இந்த கட்டண உயர்வு சீனாவை மட்டுமின்றி அமெரிக்க நுகர்வோரையும் பாதித்துள்ளது. மேலும் அமெரிக்க இறக்குமதி வர்த்தகர்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என்கிறார்.
கடந்த 2018-ல் நடைபெற்று வரும் இந்த அமெரிக்க, சீன வர்த்தக போர் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக சீன இறக்குமதியை தவிர்க்கும் வித மாக எஃகி ரும்பு, அலுமினியம், சோலார்பேனல்கள், வாஷிங் மெஷின்கள் போன்ற சில குறிப்பிட்ட பொருட்களுக்கு செக் வைத்தது அமெரிக்கா.
இதன் ஒரு நடவடிக்கையாகவே முதலில் சீனப்பொருட்களின் இறக்கு மதிக்கான கட்டணங்களை உயர்த்தியது. இதனையடுத்து சீனாவும், அமெரிக்காவைப் போன்றே அமெரிக்க பொருள்கள் மீதான வர்த்தக வரியை உயர்த்தியது.
இவற்றின் தொடர்ச்சியாகத் தான் இன்று இந்த இருநாடுகளுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள பிற நாடுகள் கூடுதலான வாய்ப்புகளை பெறத் தொடங்கியுள்ளன. கொரியா, கனடா நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நல்ல பலனடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையடுத்து மிகச் சிறப்பான பலன்களை கிழக்காசிய நாடு கள் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரு நாட்டு பொருளாதார வல்லுனர்களும் இந்த நிலையை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் சிக்கித் தவித்த வண்ணமே உள்ளனர். இத்தகைய போரானது நீண்ட கால அடிப்படையில் தொடரும் பட்சத்தில் இரு நாடு களின் பொருளாதாரமும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.
மேலும் பின்னாளில் இந்த பொருளாதார போர் தீவிரமடைந்து நாடுகளுக்கிடையேயான போராக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது எனவும் பேசப்படுகிறது. - பாரதி